autonomic conversion symptoms

தன்னியக்கத்தில் ஏற்படும் மாற்ற அறிகுறிகள்

தமிழ் விளக்கம்

தன்னியக்க நரம்பு மண்டலம் உளவியல் காரணங்களை உடலுபாதைகளாக மாற்றும் நிலை. எடுத்துக்காட்டு மிகை இதயத் துடிப்பு மற்றும் வாந்தி. சராசரியாக மனித இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். சில சமயங்களில் இது 60 முதல் 90க்கும் அதிகமான அளவிலும் இருக்கும். 90க்கும் அதிகமாக இருந்தால் மிகை இதயத் துடிப்பு (Tachycardia) என்றும், 60க்கு குறைவாக இருந்தால் குறை இதயத்துடிப்பு (Beradycardia) என்றும் கூறுவார்கள். உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத்துடிப்பு ஒவ்வொருவருக்கும் மாறும். இதய துடிப்பு பலவகையான காரணங்களால் அதிகரிக்கும். உடலியல் காரணங்களால் உண்டாகும் அதிகப்படியான துடிப்பு மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். ஆனால் நோய்களின் தாக்குதல் இருந்தால் இதயத்துடிப்பு அதிகமாகவோ, குறையவோ செய்யும். உடற்பயிற்சி செய்யும் போதும், பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும், கோபம், அதிர்ச்சி, பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும் நேரங்களிலும், உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் போதும், இதயத்துடிப்பு அதிகமாகி தானாகக் குறைந்துவிடும். தூங்கும் போதும், ஓய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு குறையும்.
பார்க்க: tachycardia - இதயத் துடிப்பு மிகைப்பு, மிகை இதயத் துடிப்பு, இதயவிரைவடிப்பு, வேகமான இதயத் துடிப்பு, இதயத்துடிப்புக் கோளாறு, துரத்து விரைவிதயம் -

English

Psycho-genic physical symptoms that suggest autonomic nervous system (ANS) responses, such as tachycardia and vomiting.