autonomic nervous system (ANS)

தானியங்கி நரம்பு மண்டலம்

தமிழ் விளக்கம்

நரம்புத் தொகுதி (Nervous system) அல்லது நரம்பு மண்டலம் என்பது மனிதர்கள் மற்றும் விலங்கினங்களில், இச்சைவழி (Voluntary), மற்றும் இச்சையின்றி (Involuntary) நிகழும் அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைப்பதற்கும், உடம்பிற்கு உள்ளேயும், வெளிச் சூழலுடன் தொடர்புகொண்டு தகவல்களையும், சைகைகளையும் உடம்பின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையில் அனுப்புவதற்குமான சிறப்பாக்கம் கொண்ட ஒரு தொகுதியாகும். இது நரம்பு உயிரணுக்கள் (nerve cells) எனப்படும் உயிரணுக்களினாலும், அவற்றையெல்லாம் இணைக்கும் நரம்புகளாலும் (nerves) ஏற்படுத்தப்பட்ட ஒரு வலையமைப்பு ஆகும். இத் தொகுதியே உயிரினங்களின் உடற்செயல்கள் அனைத்தையும் ஒன்றிணைத்துக் கட்டுப்படுத்துவதாகவும், உடலின் பல பகுதிகளிலுமிருந்து பெறப்படும் சமிக்ஞைகளை உடம்பின் பல பாகங்களுக்கு அனுப்புவதாகவும் இருக்கின்றது. இந் நரம்புத் தொகுதியானது தகவல்களின் மீது வினையாற்றி உடலின் பிற பகுதிகளில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.இதய துடிப்பு, இரத்த அழுத்தம், வியர்வை வெளியேற்றம், ஜீரணம், சிறுநீர் வெளியேற்றம் போன்ற அத்தியாவசியச் செயல்களை தானியங்கி நரம்பு மண்டலமே செய்கிறது. பெருமூளையின் தொடர்பின்றி உடலில் நடைபெறும் இதை அனிச்சைச் செயல் என்றும், இதைச் செய்யும் நரம்பு மண்டலத்தை அனிச்சை நரம்பு மண்டலம் என்றும் கூறுவர். தானியங்கி நரம்பு மண்டலம் மேலும் இரு பிரிவுகளாக சிம்பதடிக் - பாராசிம்பதடிக் நரம்பு மண்டலமாக இருக்கின்றது. தானியங்கி நரம்பு மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன. தானியங்கி நரம்பு நரம்பு மண்டலம், பரிவு நரம்பு மண்டலம (sympathetic nervous system), துணைப் பரிவு நரம்பு மண்டலம் (para sympathetic nervous system) என்று இரண்டு பிரிவுகளாக உள்ளது. உடலின் செயல் அதிகரிக்கும்போதும், வேகம் கூடும்போதும், நெருக்கடி நிலைகளிலும், உடலின் தேவைகளுக்கு உகந்தவாறு செயல்படுவது பரிவு நரம்பு மண்டலமாகும். தசைகளுக்குக் கூடுதலாக ரத்தத்தை அனுப்புவது, குறைவான ஒளி உள்ளபோது கண்களின் பாவைகளை விரிவாக்குவது போன்றவை பரிவு நரம்பு மண்டல அமைப்பின் செயல்களில் அடங்கும். பரிவு நரம்பு மண்டலச் செயல்பாடுகளுக்கு எதிராக வினைபுரிவது துணைப் பரிவு நரம்பு மண்டலம். இதயத் துடிப்பை மெதுவாக்குவதும், ரத்தத்தைத் தசைகளில் இருந்து இரைப்பைக்கும், குடல்களுக்கும் திருப்பி விடுவதும், கண்களின் பாவைகளைச் சுருங்கச் செய்வதும் துணைப் பரிவு நரம்பு மண்டலச் செயல்களில் அடங்கும். உறங்கும்போது துணைப் பரிவு மண்டலம் உடலின் செயல் வேகத்தைத் தணிக்கிறது. இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம

English

That part of the nervous system that regulates the nonvolitional bodily responses such as digestion, breathing, and the rate of heartbeat and glandular secretions. See also central nervous system (CNS) and peripheral nervous system (PNS).