autonomy versus shame and doubt

சுயசெயற்பாடு Vs வெட்கமும் சந்தேகமும், 2 - 4 வயதுள்ள குழந்தைகளின் தன்னியக்க / சுயாதீன நடவடிக்கைகளைக் கண்டிக்கும் போது ஏற்படும் உணர்வு

தமிழ் விளக்கம்

மனித வளர்ச்சி நிலைகளைப் பல்வேறு உளவியலாளரும் பல கோணங்களில் ஆராய்ந்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அறிவு வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு பியாஜேயும், உளப்பகுப்பு நிலையினைக் அடிப்டையாகக் கொண்டு சிக்மண்ட் பிராய்டும், ஒழுக்க நிலையினைக் கருத்திற் கொண்டு கோல்பேர்க்கும், உள-சமூகவிருத்தி நிலையினைக் கொண்டு எரிக்சனும் விளக்கியுள்ளனர். எரிக் எரிக்சனினால் முன்வைக்கப்பட்ட மனித வளர்ச்சி நிலைகளில், சுயசெயற்பாடு Vs வெட்கமும் சந்தேகமும் இரண்டாவது நிலையாகும். எரிக்சனின் உள சமூகவிருத்தி (Psycho social) நிலைகளாவன 1. அடிப்படை நம்பிக்கை Vs நம்பிக்கையின்மை (Trust vs. Mistrust (Oral-sensory, Birth-2 years), 2. சுயசெயற்பாடு Vs வெட்கமும் சந்தேகமும் (Autonomy vs. Shame & Doubt (Muscular-Anal, 2-4 years), 3. ஆர்வம் Vs குற்ற உணர்வு (Initiative vs. Guilt (Locomotor-Genital, Preschool, 4-5 years) 4. விடாமுயற்சி Vs தாழ்வுணர்வு, (Industry vs. Inferiority (Latency, 5-12 years) 5. சுயஅடையாளம் Vs கடமைக் குழப்பம் (Identity vs. Role Confusion (Adolescence, 13-19 years), 6. நேசம் Vs தனிமையாக்கம் (Intimacy vs. Isolation (Young adulthood, 20-24, or 20-39 years), 7. ஆக்கம் Vs அசைவற்ற தன்மை (Generativity vs. Stagnation (Middle adulthood, 25-64, or 40-64 years), 8 அக உறுதிப்பாடு. Vs நம்பிக்கையிழப்பு (Ego Integrity vs. Despair (Late adulthood, 65-death). இரண்டு வயது முதல் மூன்று வயது வரையுள்ள துள்ளு நடைப்பருவத்தில் உருவாகும் மனநிலையே, சுயசெயற்பாடும் வெட்கமும் சந்தேகமும் (autonomy versus shame and doubt). . குழந்தைகள் அவர்களின் உடல்களின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவதற்கு ஆரம்பிப்பர். இக்காலப்பகுதியில் பொதுவாகவே அப்போதுதான் குழந்தைகள் ஆடையணியும் பயிற்சியும் ஆரம்பமாகும். தான் ஒரு சுதந்திரமானவன் எனவும் ஆனால், முக்கியமான விடயங்களில் ஏனையோரின் உதவியினையும் வழிகாட்டலையும் தன்னால் பயன்படுத்த முடியுமெனவும் கருதுகின்ற உளநிலையைப் பிள்ளை பெற்றுவிடுகின்றது. உணவு உட்கொள்ளல், கழிவகற்றல் போன்றவற்றில் தானே ஈடுபடப் பிள்ளை எத்தனிக்கின்றது. அப்படி சுயமாகச் செய்து தவறிழைக்க நேரிடும்போது மற்றவர்களின் கண்டனத்திற்கும், ஏளனத்திற்கும் உட்படுவதால் வெட்கமும், தன் செயல்பாட்டின் மீது சந்தேகமும் கொள்கிறது.

English

The basic conflict found in the second stage of the psychosocial development theory of Erik Erikson (1902–1994), occurring approximately between ages two and four. During this stage, the toddler may come to feel more in control of the environment and exhibit growing independence of actions or may be overcome with feelings of guilt if independent actions are inconsistently tolerated by others.