backlash

பின்னடைவு, எதிர்வினை, ஒரு குழுவிற்கு ஆதரவான நிலைப்பாட்டால் அதற்கு எதிரான குழுவில் உருவாகும் எதிர்வினை

தமிழ் விளக்கம்

ஒரு குழுவிற்கு நன்மை தருமாறு கொண்டுவரப்பட்ட திட்டத்தால் தங்களுக்குப் பாதிப்பும், பின்னடைவும் ஏற்படலாம் என்ற அச்சத்தில் எதிர்வினையாற்றும் குழுவின் நடத்தையைக் குறிக்கும். இது தனித்துப் பொருள் தராத பெயரடைச் சொல். பாதிக்கப்பட்ட குழுவின் பெயரை இணைத்தே பொருள் கொள்ள முடியும். மண்டல் கமிஷன் அறிக்கை வெளிவந்த போது, முற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுப் போராடியது இதற்கு நல்ல உதாரணம். .

English

A reaction by one group when it comes to believe a social change to benefit another group has negative consequences. The term is usually used with an adjective that identifies the group with the reaction, as in“white backlash,”“conservative backlash,”or“smokers'backlash.”For example, white backlash was said to have begun shortly after civil rights and affirmative action legislation was passed, when for the first time, white workers had to compete with African Americans for jobs.