bail
ஜாமீன், பிணை, பிணையமளித்துச் சிறையிலிருந்து விடுதலை செய்
தமிழ் விளக்கம்
குற்றங்களை ஜாமீனில் விடக்கூடிய குற்றங்கள் (பிணைவிடுக் குற்றம்) மற்றும் ஜாமீனில் விடமுடியாத குற்றங்கள் என்று வகைப்படுத்தலாம். ஜாமீனில் விடக்கூடிய குற்றங்கள் என்றால் கைது செய்த போலீசாரே ஜாமீனில் விட்டுவிடமுடியும். குற்றமிழைத்ததாகக் கைதுசெய்யப்பட்டு, வழக்கு தொடரப்ப்ட்ட நபரை சிறையில் அடைக்காமல், வழக்கின் போக்கை சீர்குழைக்காமல், வழக்கு விசாரணையின் போது நீதிமன்றதிற்கு வருகை தந்து ஒத்துழைக்க உத்தரவாதம் பெற்றுக்கொண்டு நீதிமன்றம் விடுதலை செய்வதுண்டு. இந்த உத்தரவாதத்திற்கு ஈடாக நீதிமன்றம் நிர்ணயிக்கும் பணத்தையோ, சொத்தையோ, இல்லை உறவினர்களின் உத்தரவாதத்தையோ ஈடாகத் தரவேண்டும். ஜாமீனில் விடுதலையான நபர் நீதிமன்ற விசாரணைக்குச் சரியான முறையில் ஆஜராக வேண்டும். அப்படி ஆஜராகத் தவறினால் நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்யும். அந்த நபரை மீண்டும் கைது செய்யக் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடும். அது மட்டுமின்றி ஜாமீன்தாரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பும். ஜாமீன் கொடுத்தவர்கள் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றத் தவறும் ஜாமீன்தார்ர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு. எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுக்க முன்வருபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
English
A monetary or other form of security posted by or for someone accused of a crime. The purpose is to ensure that the accused person will appear at subsequent legal proceedings, to enable the accused to avoid imprisonment while awaiting trial, and to relieve the authorities of the cost of incarcerating the accused during this period.