BAL

இரத்ததிலுள்ள ஆல்கஹால் அளவு

தமிழ் விளக்கம்

மதுவை அருந்தியவுடன் மது அருந்துபவர்களின் இரத்தத்தில் நேரடியாக ஆல்கஹால் கலந்துவிடுகிறது. மூளைக்கு ஆல்கஹால் கலந்த இரத்தம் செல்கையில் உடல் உறுப்புகளை இயக்கும் மூளை நரம்புகள் சரிவரச் செயல்படுவதில்லை. எனவே நடை தடுமாறி, நாக்குக் குழறுகிறது. கண்பார்வை விரிவடைவதால் பார்வை மசமசப்பாகிறது. உடல் இயக்கங்களை ஒருங்கிணைப்பதும், சிந்திப்பதும் கடினமாகின்றன. எனவே மறதி ஏற்படுகிறது. அதிக அளவு ஆல்கஹாலை உடலால் உடனடியாக ஏற்றுச் சீரணித்துக் கொள்ள இயலுவதில்லை. இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை Blood Alcohol Count (BAC) என்று குறிக்கின்றனர். இது 0.10 அளவு வரை இருக்கும்பொழுது பெரிய ஆபத்து எதுவும் நேரிடாது. ஆனால், தொடர்ந்து மது அருந்துபவர்கள் உடலில் இது அதிகரித்துக் கொண்டே இருக்கும். இரத்தத்தில் மதுவின் அளவு மிக அதிகரிக்கையில் கோமா, மூச்சடைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

English

See blood alcohol level (BAL).