balance of payments
அந்நிய வர்த்தகச் சமநிலை, ஏற்றுமதி இறக்குமதியிடையே உள்ள சமநிலை
தமிழ் விளக்கம்
ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டிற்கும், பிற நாடுகளுக்கும் இடையே நடக்கும் வணிகப் பரிவர்த்தனையின் (ஏற்றுமதி / இறக்குமதி) பொருளாதார / பண மதிப்பு. ஏற்றுமதி இறக்குமதி சமமாக இருந்தால் அது வர்த்தகச் சமநிலையாகும். ஒருநாடு தான் செய்யும் ஏற்றுமதியைவிட, அதிகமான பொருட்களையோ, சேவைகளையோ இறக்குமதி செய்யும் போது வர்த்தகச் சமநிலை கெடுகிறது. வர்த்தகம் செய்யப் போதுமான பணம் இருப்பில் இருக்காது. அதிக இறக்குமதிக்காக கடன் வாங்க வேண்டிவரும். தங்கள் நாட்டு நாணய மதிப்பைக் குறைக்க வேண்டிவரும். இல்லையென்றால் தங்கள் நாட்டிடம் உள்ள தங்கத்தை விற்றோ அடமானம் வைத்தோ பற்றாக்குறையை ஈடுசெய்யவேண்டி வரும்.
English
The money value of all economic transactions between a nation and all other nations during a stated time. A balance of trade deficit occurs when a nation buys more goods and services from other countries than it sells to them. This situation causes the nation to borrow, devalue its currency compared with other nations, or pay back from its stock of gold and foreign currencies.