bankrupt
திவாலாதல், வாங்கிய கடனைக் கட்டமுடியாதவர்
தமிழ் விளக்கம்
திவால் என்கிற வார்த்தைக்குச் சரியான ஆங்கில வார்த்தை ’பேங்க்ரப்ட்சி’. லத்தீன் மொழியில் 'பேங்க்கஸ்’ என்றால் பெஞ்ச் அல்லது டேபிள் என்று அர்த்தம். 'ரப்டஸ்’ என்றால் உடைந்தது என்று அர்த்தம். வங்கியிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறும் நிலைதான் 'பேங்க்ரப்ட்சி’. அதைத்தான் 'திவாலதல்’ என்கிறோம். இங்கிலாந்து நாட்டில்தான் உலகில் முதல்முறையாக, 1542-ம் ஆண்டில் திவால் சட்டம் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. உலக அளவில் ஸ்பெயின்தான் முதல் முறையாக திவாலான நாடு. ஸ்பெயின் நாட்டின் இரண்டாம் பிலிப் மன்னன் 1550 முதல் 1596-க்குள், நான்கு முறை திவாலானதாக அறிவித்தார். 2010-ன் முதல் மூன்று மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் 41 வங்கிகள் திவாலானதாக அறிவிக்கப்பட்டன. ஜூலை மாதத்துக்குள் 90 வங்கிகள் திவாலானது. அமெரிக்காவைப் போலவே கனடாவிலும் 'மஞ்ச கடுதாசி' கொடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.
English
Financial insolvency resulting in the legal process of fairly distributing the remaining property among the creditors, except for those properties that the debtor is permitted to retain to meet basic needs and to achieve fiscal rehabilitation.