bargaining

பேரம் பேசுதல், கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப் பற்றிப் பேசுதல், ஒப்பந்த நோக்குடன் பேரம் பேசுதல்

தமிழ் விளக்கம்

ஒன்றின் மீது தொடர்ந்து மோதல் போக்கை / முரண்பாட்டை நீடிப்பதற்குப் பதில், அதனால் ஏற்படும் விரயத்தை மனதில் கொண்டு, அதை முடிவுக்குக் கொண்டு வந்தால் தங்களுக்கு என்னென்ன நன்மைகள் பயக்கும் என்று சிந்தித்து, இரண்டிற்கும் மேற்பட்ட நபர்களோ, குழுக்களோ முடிவெடுத்து உடன்பாட்டிற்கு வரும் செயல். பல்வேறு ஆதாய நாட்டமுடையவர்களால் கட்டமைக்கபட்ட சமுதாய அமைப்பில், யாருடைய ஆதாயமும் முழுமையாகப் புறக்கணிக்கப்படவில்லை, யாருக்கும் முழுமையான இழப்பென்பதில்லை என்ற உணர்வை சமுதாய அமைப்புப் பணியில் உணர்த்த வேண்டியிருப்பதால், சமுதாயப் பணியாளர்கள் பேரம் பேசும் கலையில் திறனுள்ளவர்களாக இருக்கவேண்டும். .

English

The negotiating of agreements between various factions so that the parties can compromise and make equitable exchanges. A plan to bring together the parties in such a negotiation is called a“bargaining strategy.”Bargaining is an important component of labor–management relations and in community organization and planning.