basic research
அடிப்படை / மூல ஆய்வு
தமிழ் விளக்கம்
ஒரு பொருளுக்கோ / நிகழ்வுக்கோ வணிக அல்லது பயன்பாட்டு முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், அதனின் உள்ளார்ந்த மதிப்பை அறிந்துகொள்ளவும், அதைப் பற்றிய விவேகத்தை வளர்த்தெடுக்கவும் முறையாகச் செய்யப்படும் ஆய்வு முயற்சிகள். இது பயன்பாட்டு முக்கியத்துவம் உள்ள ஆய்விலிருந்து வேறுபட்டது. சமூகப் பணியில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதே முக்கியமாகக் கருதப்படுவதால், சமூகப்பணியாளர்கள் மிக அரிதாகவே அடிப்படை ஆய்வில் ஈடுபடுவர்.
English
A systematic knowledge-building inquiry whose product has no known practical or commercial use—that is, seeking“truths”for their intrinsic worth. This is contrasted with applied research. Social work research is infrequently basic because it is oriented to solving social problems.