bedlam
கூச்சல் குழப்பம் நிறைந்த இடம், பைத்தியக்கார விடுதி, பித்தர் காப்பகம்
தமிழ் விளக்கம்
உடனிருப்பவர்கள் பற்றிய பிரக்ஞையற்று அறிவுக்குப் பொருத்தமில்லாமல் கூச்சலிடுவதும், அமளியில் ஈடுபடுவதும், பெருங்கூச்சலிடுவதுமான நடத்தை. இந்த வார்த்தை இங்கிலாந்தில் முதன்முதலில் ஹென்றி III ஆட்சிக் காலத்தில், 1247 ஆம் ஆண்டு லண்டனில் Saint Mary of Bethlehem என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உலகின் முதல் மனநோய் மருத்துவமனையைக் குறிக்கும் இடப்பெயராகி, பின் அந்த இடத்தின் தன்மையைக் குறிக்கும் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது.
English
Chaotic behavior of a group who seem to be acting irrationally and without reference to one another. The term derives from the London asylum for people with mental disabilities, officially named Priory of St. Mary of Bethlehem (Bedlam) when it opened in 1247. Bedlam became a synonym for mental hospitals for several centuries.