behavior
நடத்தை, ஒழுகலாறு, இயங்குகிற முறை
தமிழ் விளக்கம்
நடத்தை (behavior) என்பது உயிரினத்தின் செயலை அல்லது எதிர்ச் செயலைக் குறிக்கும். நடத்தல், பேசுதல், உடை அணிதல் ஆகியவை வெளிப்படையாக அடையாளாப்படுத்தக் கூடிய நடத்தைகள். சிந்தித்தல், பயப்படுதல் போன்றவை இலகுவாக அவதானிக்கா முடியாத தனிமை நடத்தைகள் ஆகும். நடத்தையென்பது பொதுவாக சூழல் தொடர்பிலேயே ஏற்படுகிறது. நடத்தை உணர்வு நிலையிலோ, உணர்வற்ற நிலையிலோ நடைபெறலாம். அத்துடன் இது வெளிப்படையாக அல்லது மறைவாக, விரும்பி அல்லது கட்டாயப்படுத்தப்பட்டும் கூட நடைபெறக்கூடும்.. மனிதர்கள் மற்றும் விலங்குகளில் உயிரியல் நடத்தை அகச்சுரப்பித் தொகுதியினாலும் நரம்புத் தொகுதியினாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு உயிரினத்தின் நடத்தையின் சிக்கல் தன்மையென்பது அதன் நரம்புத் தொகுதியின் சிக்கல் தன்மையில் அடங்கியுள்ளது. பொதுவாக, சிக்கலான நரம்புத் தொகுதிகளையுடைய உயிரினங்கள், புதிய எதிர் வினைகளைக் கற்றுக்கொண்டு தமது நடத்தைகளை அதற்கேற்றாற்போல் மாற்றிக்கொள்ளும் தகுதி கொண்டவையாக இருக்கின்றன. நடத்தைகளை வழமையானவை, வழமைக்கு மாறானவை, ஏற்றுக்கொள்ளத் தக்கவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை எனப் பிரித்துக் காண முடியும். நடத்தைகளின் ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையை சமூக நெறிமுறைகளின் அடிப்படையில் மனிதர்கள் தீர்மானிப்பதோடு, அந் நடத்தைகளைச் சமூகக் கட்டுப்பாடுகளினால் நெறிப்படுத்துகின்றனர். நடத்தையை மனிதனின் முக்கிய அடிப்படைச் செயலாகச் சமூகவியல் கருதுகிறது. மனிதர்கள் மற்றும் விலங்கின நடத்தைகளை ஒப்பீட்டு, உளவியல், நடத்தையியல், நடத்தைச் சூழலியல், சமூக உயிரியல் ஆகிய துறைகள் ஆய்வு செய்கின்றன.
நடத்தையியல் (behaviorism, அல்லது behaviourism) என்பது, 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், உளவியல் துறையில் உருவான ஒரு பகுதி. இதற்கு காரணமானவர் ஜான் பி. வாட்சன் (1878–1958) ஆவார். உளவியலில் வில்ஹெல்ம் வூண்ட் (1832-1920) என்பவரின் கருத்துக்கு எதிராகவே இவர் இதை ஆரம்பித்தார். டிட்ச்னர் என்பவர் வூண்டின் மாணவர். இவர் மனதின் உருவமைப்பைக் கண்டுணரவேண்டும் என உளவியலில் மனதின் "கட்டமைப்பியம்"structuralism த்தை உருவாக்கினார். இவருக்கு ஆதரவாக மனதின் அமைவை உணர வூண்ட் "தற்சோதனை" முறையை உருவாக்கினார். ஆனால் வாட்சன் இதை மறுத்தார். தனியொருவரின் மனநிலையின் உணர்வு, உணர்ச்சி, கவனம், அறிவை ஒருவர் தன்னைத்தானே சோதித்துச் சொல்லும் முறையில் உண்மையிருக்காதென்றும்து, அதை உளவியலிலிருந்தே நீக்கவேண்டுமென்றார். வெளிப்படையாகத் தெரியும் நடத்தையை அறிவியல் முறையில் அளக்கலாமே ஒழிய, வெளிப்படையாகத் தெரியாத அகநிலை மனநிலையை அறிவியல் முறையில் அளக்கமுடியாது என உளவியலை வாட்சன் வரையறுத்திருக்கிறார்.

English
Any action or response by an individual, including observable activity, measurable physiological changes, cognitive images, fantasies, and emotions. Some scientists consider even subjective experiences to be behaviors.