behavior modification
நடத்தை மாற்றம்
தமிழ் விளக்கம்
மனித நடத்தையை மாற்றுமுன் மனித நடத்தை எப்படி உருவாகி நிலைபெறுகின்றது என்ற புரிதல் தேவை. அப்படிப் புரிந்து கொள்ளப் பயன்முறை சார்ந்து நடத்தையப் பகுப்பாய்வு செய்யும் (applied behavior analysis) முறைகளும், ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு நடத்தை உருவாகி (உ.ம் கற்றல், பாராட்டப்படுதல் மூலம்) எப்படி நிலைபெறுகிறது (operant conditioning) என்பதைப் புரிந்துகொள்வதும், குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் இயைபு ஏற்படுத்துவதால் உருவாகும் நடத்தையைப் (classical conditioning) புரிந்துகொள்வதும், (மணியடித்தவுடன் உணவைப் பெற்று பழக்கமான நாய்க்கு, மணியடித்தும் உணவு வராதபோது அதன் நாவு ஊறுவது), மனிதர்கள் சமூகத்திலிருந்து எப்படிக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதும் புரிந்திருக்கவேண்டும். இந்தப் புரிதல்களின் அடிப்படையில் நடத்தையை மதிப்பீடு செய்து, அதை மாற்றச் செய்யப்படும் முயற்சிகளே நடத்தை மாற்றம் எனப்படுகின்றது.
English
A method of assessing and altering behavior based on the methods of applied behavior analysis, the principles of operant conditioning, classical conditioning, and social learning theory (for example, positive reinforcement, extinction, and modeling).