behavioral assessment

ஒருவர் நடந்து கொள்ளும் விதத்தை நேரடியாகக் கவனித்து மதிப்பிடுதல்

தமிழ் விளக்கம்

மனித நடத்தையை மதிப்பீடு செய்வதென்பது முதலில் பொருத்தமற்ற நடத்தையை இனங்கண்டு கொள்வதில் தொடங்கி, எந்தச் சூழலில் அந்த நடத்தை வெளிப்படுகிறது, அதற்கான முன் தூண்டுதல்கள் என்னென்ன, அந்த நடத்தையின் பல்வேறு கூறுகள் என்ன, அந்த நடத்தைக்கு வலுவூட்டும் காரணங்கள் என்ன, அந்த நடத்தையால் ஏற்படும் விளைவுகள் / தீங்குகள் என்ன, அந்த நடத்தைக்கான காரணிகளை மாற்ற அல்லது செயழிலக்கச் செய்ய என்ன செய்யவேண்டும் எனபதைப் பற்றி அறிவதே நடத்தை மதிப்பீடு எனப்படும். நடத்தை மதிப்பீடு என்பது ஒருவருடைய நடத்தையை நேரடியாக, பல சூழல்களில் கண்டுணர்ந்தும், அவரோடும் அவர் தொடர்புள்ளவர்களோடு உரையாடியும், சிக்கலான நடத்தைகளை உளவியல் சோதனைகளுக்கு உட்படுத்தியும் அறிய முயலும் அறிவியல் முறை.

English

In behavior modification and social learning theory, the delineation of undesired behavior patterns and their controlling conditions. The description of these patterns is based on direct observation rather than on inference about underlying pathology based on surface cues. See also psychosocial assessment.