behavioral family therapy (BFT)
குடும்ப உறுப்பினர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படுத்த அளிக்கப்படும் சிகிச்சை
தமிழ் விளக்கம்
நடத்தை மாற்ற சிகிச்சையில் பயன்படுத்தப்படும் நுட்பங்களையும், சமூகக் கற்றல் (Social Learning) கோட்பாடுகளிலிருந்து பெறப்பட்ட தெளிவையும் கொண்டு, குடும்ப உறுப்பினர்களின் நடத்தையைச் சீராக்கவும், செழுமைப்படுத்தவும் அளிக்கப்டும் சிகிச்சை முறை. இதில் ஒரு குடும்பத்தையே வாடிக்கையாளராக ஏற்றுக்கொண்டு, அவர்களின் நடத்தைகளின் மூலமாக வெளிப்படும் பிரச்சனைகளை வரையறுக்க (புரிந்து கொள்ள) உதவி, அப்பிரச்சனைகளைத் தீர்க்கவும், அவர்களுக்கு ஏற்புடைய தீர்வுகளைக் கண்டடையவும் உதவும் முறை. குடும்ப உறுப்பினர்களுக்குள் வீட்டு வேலைகள் மற்றும் சில செயல்களை திட்டமிட உதவுதல், சில விசயங்களில் அவர்களுக்குள் வெளிப்படையாக உரையாட ஆலோசனை சொல்லுதல் போன்றவை இந்தச் சிகிச்சை முறையின் முக்கிய அம்சமாகும்.
English
The use of social learning theory and the therapeutic techniques of behavior modification to help families achieve specific goals. In behaviorally oriented family therapy, the social worker helps the client–family members define their problems clearly in terms of overt behaviors and develop problem-solving behaviors to which all agree. Homework assignments, quantifying specific actions, and maintaining certain communications activities are frequently part of this form of intervention.