behavioral rehearsal

நடத்தை ஒத்திகை, எப்படி நடந்து கொள்வது என்பதற்கான ஒத்திகை

தமிழ் விளக்கம்

பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவும், அதைத் தீர்க்கவும் நடத்தையியல் கோட்பாட்டைத் தங்கள் அணுகுமுறையாகக் பின்பற்றும் சமூகப்பணியாளர்களும், மனித சேவையில் ஈடுபடும் பிற திறத்தொழிலினரும் (professionals), தங்கள் வாடிக்கையாளர்களிடம் எந்தெந்த மாதிரியான நடத்தைகள் விரும்பத்தக்கது என்பதை விளக்கி, அந்த நடத்தையைச் சித்தரித்து, பாவனை செய்யச் சொல்லியும் (role playing), அதைக் காட்சிக்குரியதாக்கியும், (demonstration) உற்சாகப்படுத்துவர். அதை ஒரு பாதுகாப்பான அலுவலகச் சூழலில் மீண்டும் மீண்டும் செய்துகாட்டி, உரிய திருத்தங்கள் செய்யச் செய்ய, அதுவே பொருத்தமான நேரத்தில் விருப்பமான நடத்தையாக வெளிப்படும் என்ற அனுமானதின் அடிப்படையில் அமைந்தது.

English

The technique used by social workers and other helping professionals, especially those with behaviorist orientations, in which the professional suggests or demonstrates desired behavior to a client and then encourages the client, through description, role playing, and other demonstrations, to behave similarly. With practice, feedback, and repetition of the behavior in the relatively“safe”environment of the professional's office, the client is more likely to be successful in achieving the desired behavior at the appropriate time.