behaviorism
நடத்தையியல், நடத்தைநெறிவாதம், ஒருவர் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அவரை ஆராயும் உளவியல் முறை
தமிழ் விளக்கம்
இவன் பாவ்லோவ் (1849-1936), JB வாட்சன் (1878-1958), BF ஸ்கின்னர் (1904-1990), மற்றும் பல அறிஞர்களால் முன்னெடுக்கப்பட்ட உளவியல் முறை. இவர்களுக்கு முன்னர் தனியொருவரின் நடத்தை தன்னறிவாலும், உள்முக நோக்காலும், ஆழ்மன உந்துதலாலும் உருவாகின்றது என்று கருதப்பட்டதால், மனித நடத்தையை அறிந்துகொள்ள மனதின் கட்டமைப்பைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. .நடத்தையியலார் இதை மறுத்தனர். மனிதர்களின் மனநிலையை வெளிப்படையாகத் தெரியும் நடத்தையை மூலம் தான் புரிந்துகொள்ளமுடியும், அளந்து மதிப்பிடமுடியும் என்றனர். வெளிப்படையாகத் தெரியாத அகநிலை மனநிலையை உள அறிவியல் முறையில் அளக்கமுடியாது என்றும் தெரிவித்தனர். நடத்தை என்பது தன்னறிவாலோ, உள்முக நோக்காலோ அல்லது ஆழ்மன உந்துதலாலோ ஏற்படுவதில்லை. மாறாக நடத்தை என்பது உணர்வு நிலையில் கற்றுக் கொள்ளப்படுகின்றன என்று கருதினார்கள். இணக்கமற்ற நடத்தை என்பது கற்றலின் விளைவென்றும், அதை மனதிலிருந்து அகற்ற முடியும் என்று கண்டறிந்தனர். இவர்களின் கண்டறிதல்கள் மனித நடத்தைகளை முற்றிலும் புதிய கோணத்தில் புரிந்துகொள்ள, அதாவது இணக்கமற்ற நடத்தைகளை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. இதிலிருந்துதான் நடத்தை மாற்ற சிகிச்சை முறைகள் (behavior modification) மற்றும் சமூகத்திலிருந்து கற்றல் (social learning theory) போன்ற கோட்பாடுகள் உருவாகி வளர்ந்தன.
English
The school of psychology and related sciences, founded by Ivan Pavlov (1849–1936), J. B. Watson (1878–1958), B. F. Skinner (1904–1990), and others, which seeks to explain behavior in terms of observable and measurable responses. Basic tenets of the orientation are that maladaptive behavior patterns are learned and can be unlearned and that introspection and the unconscious are unscientific hypotheses. Behaviorism has led to theoretical concepts and therapeutic methods such as behavior modification and social learning theory.