Besant, Annie
பெசன்ட், அன்னி (1847-1933)
தமிழ் விளக்கம்
அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant) 1847ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி லண்டனில் பிறந்தார் அன்னி பெசன்ட். இவரது பெற்றோர் டாக்டர் வில்லியம் பேஜ்வுட்- தாயார் எமிலி. அன்னி பெசன்டின் 5வது வயதிலேயே அவரது தந்தையார் மரணமடைந்ததார்.1866ல் பிராங்க் பெசண்ட் என்பவர் விரும்பி திருமணம் செய்து கொண்டார். அப்போது அன்னி பெசன்டுக்கு வயது 20. பின்னர் குடும்ப வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து, குழந்தைகள் மீது உரிமை பெற நீதிமன்றத்தில் வழக்கு, அன்புத் தாயாரின் மரணம் இவையெல்லாம் மதங்கள் மீது கொண்ட அவநம்பிக்கையை மேலும் வலுப்படுத்தின. 1872-ஆம் வருடம் பிளாவட்ஸ்கி அம்மையாரின் பிரம்ம ஞான சபையில் அன்னி பெசன்ட் தன்னை இணைத்துக் கொண்டார். ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சீடராக விவேகானந்தர் அமைந்தது போல், பிளாவட்ஸ்கி அம்மையாருக்கு அன்னி பெசன்ட் அமைந்தார். 1893இல் இந்தியா வந்தார். பிரம்ம ஞான சபையின் கொள்கைகளை இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று மக்களோடு பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமை கொண்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து ‘இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்பை 1913-இல் உருவாக்கினார். அத்துடன் நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைக்க ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்து, ‘இந்திய இளைஞர்கள் சங்க’தை (YMIA) 1914-ஆம் ஆண்டு துவங்கினார். அத்துடன் அகில இந்திய காங்கிரஸ் முதல் பெண் தலைவராக 1917-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
பெசன்ட், அன்னி (1847-1933) அம்மையார் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் பல நிலைகளில், தளங்களில் முன்னோடியாகச் செயல்பட்ட உன்னதமான பெண்மணி. பொதுவுடமைவாதி, பிரம்மஞான சபை (தியாசபிக்கல் சொஸைட்டி) நிறுவனர். தொழிற்சங்கவாதி. இந்தியக் கலாச்சார மேம்பாட்டிற்கும், இந்திய விடுதலைக்கும் முக்கியப் பங்காற்றியவர். இந்தியத் தன்னாட்சிக்காக Homerule Movement உருவாக்கியவர். குடும்பக் கட்டுபாட்டையும், கருத்தடையையும் வலியுறுத்தியவர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை ஸ்தாபிக்க மதன் மோகன் மாளவியாவிற்கு உறுதுணையாக நின்றவர். தத்துவஞானி ஜெ. கிருஷ்ணமூர்த்தியை இனங்கண்டு இவ்வுலகத்திற்கு அறிமுகம் செய்தவர்.

English
(1847–1933) An English community organizer, she helped organize unions for poor working women and published and distributed information about birth control to poor families. She helped found and lead the British Malthusian Society to promote contraception.