Beveridge, William Henry
பிவரிட்ஜ், வில்லியம் ஹென்றி (1879–1963)
தமிழ் விளக்கம்
நவீன சமூக நலத்தின் பிதாமகர் என்று போற்றப்படுபவர். இங்கிலாந்து நாட்டின் சமூக நலத்திட்டங்களை வடிவமைத்தவர். தொழிலாளர்களுக்கும், ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் சாதகமான பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைப் பரிந்துரைத்து அதைச் சட்ட வடிவமாக்கியவர். தொட்டில் முதல் கல்லறை வரைக்கும் செய்து தரப்படவேண்டிய நலத்திட்டங்களைப் பரிந்துரைத்தவர். இவருடைய பரிந்துரைகளே சமூக நல அரசுகளுக்கான அடிப்படையாக அமைந்தது. டாயின் பி ஹால் (Toynbee Hall) என்றழைக்கப்பட்ட முதல் சமுதாயபணி ஊழியரகதிற்கு இயக்குனராகவும் செயல்பட்டவர்.
English
(1879–1963) Founder of the British welfare state. Before World War II, he planned and wrote major social legislation to help poor people, laborers, and children. An early settlement house leader and social worker, Beveridge served as director of Toynbee Hall. His 1942 Beveridge Report was implemented after the war and is the basis for Great Britain's current social security and health care system. It has also been used as a model by many other nations, especially former British colonies.