BFT
குடும்ப உறுப்பினர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படுத்த அளிக்கப்படும் சிகிச்சை
தமிழ் விளக்கம்
நடத்தை மாற்றச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் நுட்பங்களையும், சமூகக் கற்றல் கோட்பாடுகளிலிருந்து பெறப்பட்ட தெளிவையும், குடும்ப உறுப்பினர்களின் நடத்தையை, சீராக்கவும், செழுமைப்படுத்தவும் அளிக்கப்டும் சிகிச்சை முறை. இதில் ஒரு குடும்பத்தையே வாடிக்கையாளராக ஏற்றுக்கொண்டு, அவர்களின் நடத்தைகளின் மூலமாக வெளிப்படும் பிரச்சனைகளை (புரிந்துகொள்ள) வரையறுக்க உதவி, அப்பிரச்சனைகளைத் தீர்க்கவும், அவர்களுக்கு ஏற்புடைய தீர்வுகளைக் கண்டடையவும் உதவும் முறை. குடும்ப உறுப்பினர்களுக்குள் வீட்டு வேலைகள் மற்றும் சில செயல்களைச் செய்யத் திட்டமிட உதவுதல், அவர்களுக்குள் சில விசயங்களில் வெளிப்படையாக உரையாட ஆலோசனை சொல்லுதல் போன்றவை இந்தச் சிகிச்சை முறையின் முக்கிய அம்சமாகும்.
English
See behavioral family therapy (BFT).