bias
பாரபட்சம், ஒருதலைச் சார்பு, நடுவுநிலைமை அற்ற நிலை
தமிழ் விளக்கம்
1 .மனிதர்களின் மீதோ, குழு / இனத்தின் மீதோ, கருத்தின் மீதோ, பொருளின் மீதோ காரணமின்றிக் காட்டப்படும் நேர்மறையான (விருப்பு) அல்லது எதிர்மறையான உணர்ச்சிகள். 2. ஆய்வு முறைகளில் தவறான மாதிரிகளைக் கையாண்டும், பொருத்தமற்ற உத்திகளையும் முறைகளையும் கையாண்டும், தான் முன்னதாகத் தீர்மானித்தபடி, ஆய்வு முடிவுகள் வருமாறு ஆய்வு செய்தல்.
English
1. An attitude that can influence feelings, usually resulting in an individual's having positive or negative predispositions about a particular group, individual, idea, or object. 2. In research, a tendency for the results to lean in one or another direction because of improper sampling, misuse of statistical or research tools, or other improper methods.