bibliotherapy

வாசிப்புச் சிகிச்சை, உளவியல் கோளாறுகளை நீக்குவதற்காகப் புத்தகம் படித்தலை பயன்படுத்துதல்

தமிழ் விளக்கம்

ஒரு சில உளப்பிணி நோயாளிகளுக்கும், உணர்ச்சி ரீதியான தடுமாற்றம் உள்ளவர்களுக்கும், அவர்கள் பிரச்சனைகளோடு சம்பந்தப்பட்ட புத்தகங்களை (புனைவிலக்கியம், சுயமுன்னேற்றம், கவிதை) படிக்கச் சொல்லி வழிகாட்டுவது. சமூகக் குழுப்பணி முறையிலும், குழுச் சிகிச்சை முறையிலும், வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா வயதினருக்கும் இச்சிகிச்சை முறை பயன்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நோயுடையவர்களுக்கு மட்டுமல்லாமல், சுயமுன்னேற்றம் மற்றும் ஆளுமை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படும் குழுக்களிலும் இந்த முறை நல்ல பலனை அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

English

The use of literature and poetry in the treatment of people with emotional problems or mental illness. Bibliotherapy is often used in social group work and group therapy and is reported to be effective with people of all ages, with people in institutions as well as outpatients, and with healthy people who wish to share literature as a means of personal growth and development. See also art therapy and poetry therapy.