Big Brothers/Big Sisters of America
(பெற்றோர் பராமரிப்பற்ற) இளவயது ஆண் மற்றும் பெண்களுக்கு வழிகாட்டும் தன்னார்வ அமைப்பு
தமிழ் விளக்கம்
தேச முக்கியத்துவம் வாய்ந்த (Patriotic and National Organizations) நிறுவனம் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தால் (United States Congressional charter) அங்கீகரிக்கப்ட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம். இந்நிறுவனம் பெற்றோர் பரமரிப்பற்ற / வழிகாட்டுதலற்ற இளவயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, சமூகப்பணியாளர்களின் மேற்பார்வையின் கீழ் தன்னார்வத் தொண்டர்களால் நல்வழி காட்டுமுகமாக ஏற்படுத்தப்பட்டது. 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Big Brothers அமைப்பும், 1971 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Big Sisters அமைப்பும், 1977 ஆம் ஆண்டு ஒன்றிணைந்தது செயல்படுகிறது.
English
Voluntary associations whose work under professional supervision, usually by social workers, provides individual guidance and companionship to boys and girls deprived of a parent. Big Brothers was founded in 1946, especially to provide role models for fatherless boys. Big Sisters was formed in 1971, primarily to provide role models and positive female images for girls and boys. The two groups were merged in 1977.