bigamy

இரு தார (அ) இரு கணவர் முறை

தமிழ் விளக்கம்

திருமணங்கள் பல வகைப்படுகின்றன. பெரும்பான்மைத் திருமணங்கள் ஒர் ஆண், ஒரு பெண் ஆகிய இருவருக்கிடையே நடைபெறும் ஏற்பாடு ஆகும். ஒருதுணை மணம் (Monogamy) என்பது ஒரு பெண்ணும், ஒரு ஆணும் மண உறவில் இணைந்து வாழ்வதைக் குறிக்கின்றது. மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒருதுணை மண முறையே உயர்ந்தநிலை எனக் கருதப்படுவதால், நவீன சமுதாயங்களில் இது விரும்பிப் பின்பற்றப்படும் ஒரு முறையாகிவிட்டது, மாறாக ஒருவருடன் திருமண உறவு கொண்டிருக்கும் போது, இன்னொருவரையும் மணப்பது இருதார மணமுறையாகும். பலநாடுகளில் இருதார மணமுறை சட்டப்படி செல்லத்தக்கதல்ல.

English

The illegal offense of having more than one wife or husband at the same time. In the United States, bigamous marriages have no legal validity in any state. See also polygamy.