biodegradability

உயிரிகளால் சிதைவுறும் தன்மை

தமிழ் விளக்கம்

ஒரு பொருள், பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களால் அதனுடைய மூலக்கூறுகளாகச் (நீர், கார்பன் டை ஆக்ஸைடு, பிற மூலக்கூறுகள்) சிதையும் தன்மை. உயிரிகளால் சிதைவுறும் தன்மையால்தான் வாழ்க்கை நிலைபெறுகிறது. முக்கியமான இச் செயலால்தான் இயற்கையான சுழற்சி ஏற்பட்டு ஒன்றையொன்று சார்ந்த வாழ்க்கை சாத்தியமாகிறது. செயற்கைப் பொருட்களை உயிர்களால் சிதைக்க முடியாதாகையால் அதை மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தமுடியாது. அதனுடைய கழிவுகள் சுற்றுச் சூழல் சீர்கேட்டை விளைவிக்கும்.

English

The capability of decaying (being broken down into component elements, usually including water, carbon dioxide, and other simple, small molecule substances), caused by the actions of living things such as bacteria and molds. Biodegradability is an important environmental concern because it is a natural recycling process; all new life and the substances necessary to sustain life use the products of biodegration. Because synthetic materials are not biodegradable, their disposition after use is not a resource but an environmental problem.