bioethical decision making
உயிரிகளுக்கு உகந்ததான முடிவெடுத்தல், உயிரியல் சம்பந்தமான முடிவுகள் எடுக்கும் போது பின்பற்றவேண்டிய நெறியியல்
தமிழ் விளக்கம்
இது நோயாளிகளைப் பராமரிக்கும் போது வழங்கப்படும் மருத்துவ சேவைகளின் தன்மையையும், அளவையும் மற்றும் நடைமுறைகளையும் தீர்மானிக்கும் பொதுவான அணுகுமுறை. நோயாளிகள், பிறவிக் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளாகவோ அல்லது உடலாலும், உள்ளத்தாலும் தளர்ந்த முதியவர்களாகவோ இருக்கும் பட்சத்தில், அவர்களின் உயிர் பிரியாவண்ணம் குறைந்த பட்ச வாழக்கைத் தரத்தைக் கொடுக்குமளவு நவீன மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இந்த மாதிரியான தொழில்நுட்பத்தை மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள், சுயநல நோக்கோடு பயன்படுத்திவிடாமல் நோயாளியின் நன்மை கருதிப் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட நெறிமுறைகளில், விவரம் தெரிந்த பொதுமக்களும் பங்கெடுக்க வழிகாணப்பட்டுள்ளது.
English
The system and procedures for establishing the type and degree to which medical services will be provided to a patient. These patients are most frequently newborns with birth defects or very old persons suffering from serious mental or physical dysfunctions. Although modern medical technology can maintain at least a diminished quality of life for people with extremely debilitating health problems, the health care professionals must use carefully specified criteria in deciding whether to use these procedures. Moreover, their work must be overseen by representatives from the public.