bioethics

உயிரியல் நெறியியல், உயிரினங்களைக் கையாளும் நெறிமுறைகள், உயிரியல் சம்பந்தமான முடிவுகள் எடுக்கும் போது பின்பற்றவேண்டிய நெறியியல் / அறவியல்

தமிழ் விளக்கம்

நோயாளிகளுக்கோ அல்லது உயிரனங்களுக்கோ சிகிச்சையளிக்கும் போதோ அல்லது மருத்துவ ஆய்வு செய்யும் போதோ பின்பற்றப்படவேண்டிய நெறிமுறைகள் அல்லது ஒழுக்கவிதிகள் என்றும் இதைச் சொல்லலாம். உயிரியல் மற்றும் மருத்துவ இயலில் ஆய்வு செய்யும்போது குறிப்பாக மரபணுப் பொறியியல் (genetic engineering), இனப்பெருக்கத் தொழில்நுட்பம் (reproductive technology), இனப்பெருக்க நடைமுறையில் பயன்படுத்தப்படும் பதிலிகள் அல்லது வாடகைத்தாய்கள் (surrogacy), உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை (organ transplantation), மருத்துவ மற்றும் மன நல சிகிச்சையளித்தல் அல்லது சிகிச்சையைத் திரும்பப் பெறுதல் (use and withdrawal of medical and mental health treatment), தற்கொலை மற்றும் நோயாளிகளின் உரிமைகள் போன்றவற்றைக் கையாளும் போது பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள் இந்த நெறிமுறைகளில் அடங்கும்.

English

Also known as biomedical ethics, the analysis and study of legal, moral, social, and ethical considerations involving the biological and medical sciences. Issues of particular interest include genetic engineering, reproductive technology, surrogacy, organ transplantation, use and withdrawal of medical and mental health treatment, suicide, and patients'rights.