biofeedback
உடற் செயல்களை சுயகண்காணிப்பின் மூலம் உணர்தல்
தமிழ் விளக்கம்
மனிதர்கள் தங்களுடைய உடலியக்கச் செயல்பாடுகளை, உதாரணமாக இருதயத் துடிப்பு, தசை இறுக்கம், மூளை அலைகளின் (கருத்தலைகள் / கருத்தொளிகள்) செயல்பாடு போன்றவற்றைச் சுயமாகக் கண்காணிப்பதன் மூலம் மாற்ற முயல்வது. ஒரு மனிதரின், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உடலியக்கச் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை, உபகரணங்களின் உதவியோடு, சுயமாகக் கண்காணிப்பதற்கு ஏற்றவாறு, அதில் ஈடுபடும் மனிதர்களுக்குக் காண்பிப்பதை பின்னூட்டமிடுதல் என்கின்றோம். இந்தப் பின்னூட்டத்தைப் பார்ப்பவர்கள் சுய கண்காணிப்பின் மூலம் எப்படித் தங்களின் உடலியக்கச் செயல்பாடுகளை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதை அறிந்துகொண்டு, அதற்கேற்ப தங்களின் உடலியக்கச் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள முடியும் நிலை.
English
A method of training people to modify their own internal physiological processes, such as heart rate, muscle tension, blood pressure, and brain wave activity, through self-monitoring. Usually, this is done by using mechanical instruments to provide information about variations in one or more of a subject's physiological processes. The resulting information is displayed to the subject (feedback), which helps the individual to control these processes even though he or she may be unable to articulate how the learning was achieved.