biomedical ethics
உயிரியல் நெறியியல், உயிரினங்களைக் கையாளும் நெறிமுறைகள், உயிரினங்களைக் கையாள வகுக்கப்பட்ட மருத்துவ நெறிமுறைகள்
தமிழ் விளக்கம்
உயிர்களில் மருத்துவ ஆய்வோ, சிகிச்சையோ செய்யும் போது பின்பற்றப்படவேண்டிய நெறிமுறைகள் அல்லது ஒழுக்கவிதிகள் என்றும் இதைச் சொல்லலாம். உயிரியல் மற்றும் மருத்துவ இயலில் ஆய்வு செய்யும்போது, குறிப்பாக மரபணுப் பொறியியல் (genetic engineering), இனப்பெருக்கத் தொழில்நுட்பம் (reproductive technology), இனப்பெருக்க நடைமுறையில் பயன்படுத்தப்படும் பதிலிகள் அல்லது வாடகைத்தாய்கள் (surrogacy), உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (organ transplantation), மருத்துவ மற்றும் மன நல சிகிச்சையளித்தல் அல்லது சிகிச்சையைத் திரும்பப் பெறுதல் (use and withdrawal of medical and mental health treatment), தற்கொலை மற்றும் நோயாளிகளின் உரிமைகள் போன்றவற்றைக் கையாளும் போது மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை இந்த நெறிமுறைகளில் அடங்கும்.
English
See bioethics.