Bion group
பையான் குழு, தவிஸ்டோக் குழு
தமிழ் விளக்கம்
வில்ப்ரெட் பையான் இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயர், பின்னாளில் உலகப் புகழ்பெற்ற மனநல மருத்துவரானார். இவரால் தொடங்கபட்ட தவிஸ்டோக் மனநல மையத்தில், மனப்பிறழ்வுக்கான குழுச் சிகிச்சையின் போது, குழுப் பங்கேற்பாளர்களின் உணர்வெழுச்சிப் பெயர்ச்சியை (Transference - உணர்வெழுச்சி இடமாற்றீடு), ஒரு பார்வையாளராக மட்டும் பார்த்து, குழுச் செயல்பாடுகளில் தலையிடாமல் விளக்கமளிப்பதன் மூலம் குழு உறுப்பினர்கள் (பங்கேற்பாளர்கள்) உட் (அகத்) தெளிவு பெற உதவும் உளப்பகுப்பாய்வு சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியவர்.
English
See Tavistock group.