biopsychosocial

உடல், உள்ளம், சமூகம் உள்ளடங்கிய காரணிகள்

தமிழ் விளக்கம்

உடல் (மரபணுக் கட்டமைப்பு, நோயெதிர்ப்புத் திறன், உட்கொள்ளும் மருந்துகள்), உள்ளம் (தன்மதிப்பீடு, கவலை, பதட்டம், மன உணர்வுகள்), சமூகம் (குடும்பம், வேலை, வருமானம், கல்வி) இந்த மூன்றும் நோயுறுவதிலும், நோயெதிர்ப்பு நடத்தையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்ற கருத்தாக்கம். நோய்க்கான காரணங்களாகச் சொல்லப்படும் மரபணுக் குறைபாடுகள், கிருமிகளின் தாக்கம், விபத்து போன்ற காரணங்களைவிட, இந்த உயிர் மருத்துவ மாதிரியில் (biomedical model) சொல்லப்படும் காரணங்கள் விரிவானதும், நடைமுறை சார்ந்ததாயும் இருப்பதால், உடல்நல உளவியல், குடும்பச் சிகிச்சை, உடலியக்கச் சிகிச்சை, மருத்துவ சமூகப்பணி, மற்றும் மருத்துவ உளவியல் போன்ற பல துறைகளிலும் 'உடல்-மனம்-சமூகம்' தொடர்புக் கருத்தாக்கம் வெகுவாகப் பயன்படுகிறது.

English

A term applied to phenomena that consist of biological, psychological, and social elements, such as stress.