bipolar disorder

இருமனக் (மனத் தளர்ச்சி X மன எழுச்சி, சோகம் X களிப்பு குழப்பச் சீர்கேடு, மந்த மிகை எழுச்சிக் குழப்ப சீர்கேடு, இருமனக் கலப்புக் குழப்பம் .

தமிழ் விளக்கம்

ஒருவரின் உளப்பாங்கிலும் (mood), உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட வெளிப்பாட்டிலும் (affect) ஏற்படும் கோளாறு. இது கடந்த காலத்தில் மனத் தளர்ச்சி (depressive) X மன எழுச்சி (manic) நோய் என்று அறியப்பட்டிருந்தது. இது இருவகைப்படும். மனவெழுச்சி வகையில் (மிகை இயக்கம், பரவச நிலை, கவனச் சிதறல், அழுத்தமான பேச்சு, பகட்டுத்தனம்) போன்ற அறிகுறிகளும், மனச் சோர்வு வகையில் (ஆழ்ந்த சோகம், எதிலும் அக்கறையின்மை, தூக்கமின்மை, பசியின்மை, தன்முனைப்பின்மை, சிந்தனைத்திறன் குறைதல்) போன்ற அறிகுறிகளும், இவை இரண்டும் மாறிமாறி வரும் மூன்றாம் வகையும் இதிலடங்கும். மனவெழுச்சி சம்பந்தப்பட்ட அறிகுறிகுறிகளை இருமனக் குழப்ப சீர்கேடு I என்றும், மனச்சோர்வு சம்பந்தப்பட்ட அறிகுறிகளை இருமனக் குழப்ப சீர்கேடு II என்றும் வகைப்படுத்துகின்றனர்.

English

A category of mental illnesses in which mood and affect are maladaptive. Formerly known as manic–depressive illness, the category may be subcategorized as manic type (symptoms often include hyperactivity, euphoria, distractibility, pressured speech, and grandiosity), depressed type (symptoms often include deep sadness, apathy, sleep disturbance, poor appetite, low self-esteem, and slowed thinking), and mixed type (frequently alternating patterns of manic and then depressed traits). The diagnosis of this condition distinguishes between bipolar I disorder (predominately manic) and bipolar II disorder (predominately depressive).