birth control

கருத்தடை, பிறப்பைக் கட்டுப்படுத்தல், குடும்ப கட்டுப்பாடு

தமிழ் விளக்கம்

கருத்தடை என்பது ஒரு பெண் கர்ப்பமடைவதைச் செயல், சாதனம் மற்றும் மருந்துகள் மூலம் தடுத்தலாகும். குடும்பக் கட்டுப்பாட்டில் கருத்தடை முக்கிய பங்கு வகிக்கிறது. பல மதங்கள், கலாசாரங்கள் கருத்தடைக்கு எதிரான நிலை கொண்டுள்ளன. இருப்பினும் கருக்கலைப்புடன் ஒப்பிடுகையில் கருத்தடைக்கான எதிர்ப்பு குறைவானதாகவே உள்ளது. பெண்ணின் கரு முட்டையுடன் ஆணின் கரு அணு இணைவதைத் தடுக்கும் பல செயல்களும், முறைகளும் கருத்தடையில் பின்பற்றப்படுகின்றது. அவையாவன 1. கருத்தடைச் செயல்கள். விந்து வெளியேற்றத்தின் முன்னர் ஆண்குறியைப் புணர்புழையிலிருந்து வெளியே எடுத்தல் பன்னெடுங்காலமாகப் பயன்படும் கருத்தடை முறையாகும். மாதவிடாய் சுழற்சியில் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் உடலுறவு கொள்ளுதல் மற்றொரு கருத்தடை முறையாகும். இருப்பினும் இம்முறைகள் உறுதியாகக் கருவுறுதலைத் தவிர்க்க உதவும் என்று கூற முடியாது. 2. தடுப்பு முறைகள் - ஆண் கருத்தடை சாதனம், பெண் கருத்தடை சாதனம். 3. கருத்தடுப்பு சாதனங்கள் - ஐயுடி 4. ஸ்டிராய்டு அல்லாத மாத்திரைகள் 5. நிரந்தரக் கருத்தடை முறைகள்.

English

Limiting or preventing reproduction by various means. These include contraceptive (antipregnancy) devices such as condoms, contraceptive pills, diaphragms, intrauterine devices (IUDs), and spermicides. Another type of birth control occurs through the more-or-less permanent surgical sterilization of men (as in vasectomy) or women (as in tubal ligation). Among the more-common efforts to control conception is“natural family planning,”in which there is awareness of the fertility cycle and sexual intercourse occurs only during those times in the cycle believed to be less likely to result in pregnancy. Abstinence from sexual intercourse and abortion are other methods used in birth control. See also contraception and reproductive technology.