birth defects
பிறவிக் குறைபாடுகள்
தமிழ் விளக்கம்
குழந்தை பிறக்கும் போது இருக்கும் குறைபாட்டைத் தான் பிறவிக்குறைபாடு என்று சொல்வார்கள். இது மிதமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம். பிறவிக் குறைகளின் தன்மையைப் பொறுத்து அதை, குழந்தை பிறப்பதற்கு முன்னரோ, பிறக்கும் போதோ அல்லது பிறந்த பிறகோ எந்த நேரத்திலும் கண்டுபிடிக்க முடியும். இதுவரை 3,000 - க்கும் மேலான பிறவிக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. பிறவிக் குறைபாடுகளை வடிவ ரீதியானது, (Structural), மரபணுக் குறைபாட்டால் வருவது, தொற்று நோய்களால் அல்லது வீரியம் அதிகமான மருந்துகளால் வரும் குறைபாடுகள் என்று பல வகைகளாகப் பிரிக்கலாம்!
1.வடிவ ரீதியிலான குறைபாடுகள் (Structural) இந்த வகையில் குழந்தையின் உடம்பில் ஒரு சில உறுப்புகள் முழுமையாக உருவாகி இருக்காது. இந்தக் குறைபாடுகளை உடலின் உள்ளே ஏற்படுவது (உதாரணமாக இதயக்கோளாறு) அல்லது உடலின் வெளிப்பாகத்தில் ஏற்படுவது (உதாரணமாக உதடு கிழிந்து காணப்படுதல், அல்லது ஆறாவது விரல் இருத்தல் போன்றது). நரம்புக் குழாயில் ஏற்படும் பிரச்சினை போன்றவை பொதுவான வடிவப் பிறவிக் குறைபாடுகளாகும். முதுகுத் தண்டுவடத்தில் கட்டி இருத்தல் (Spinal bifida) அல்லது மண்டையோடு முழுமையடையாமல் இருத்தல். (Anencephaly) போன்றவையும் வடிவக் குறைபாடுப் பிரச்சனைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
2. மரபணுக் கோளாறால் வருவது (Genetic). மரபணுக் கோளாறில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஜீன்கள் பெற்றோர்களிடம் இருந்து வரும் போது தவறிப் போவதோ, சிதைந்து போவதோ அல்லது அதிகப்படியான (எக்ஸ்ட்ரா) குரோமோசாம்கள் வருவதோதான் காரணம். குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடுகள் கருத்தரிப்பின் போதே ஏற்பட்டு விடுகிறது. குரோமோசோம் குறைபாட்டினால் வரும் ஒரு பொதுவான பிரச்சினை 'டவுண் சின்ட்ரோம்!'.
3. சில பிறவிக் குறைபாடுகள், மிக முக்கியமாகத் தாய் கர்ப்பமாயிருக்கும் முதல் மூன்று மாதங்களில் வரும். 'ரூபெல்லா' (ஜெர்மன் அம்மை) போன்ற குறைபாடுகள் தொற்று நோயின் பாதிப்பினால் வரலாம்.

English
See congenital abnormalities.