birth-order theories

குழந்தைகள் பிறந்த வரிசையை வைத்து அவர்களின் தன்மையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யும் கோட்பாடு

தமிழ் விளக்கம்

குழந்தைகள் பிறக்கும் வரிசைப்படி, (முதலில் பிறந்தவர், இடையில் பிறந்தவர், கடைசியில் பிறந்தவர்) அவர்களுடைய ஆளுமை கட்டமைக்கப்டுகிறது என்ற அனுமானம். முதலில் பிறந்த குழந்தை அதிகக் கவனிப்புடனும், அதிக எதிர்பார்ப்புகளுடனும் வளர்க்கப்படுவதால் அவர்கள் பின்னாளில் அதிக பொறுப்புடனிருக்கவும், சாதிக்கும் மனோபாவத்துடனும் இருப்பார்கள். இடையில் பிறந்தவர் மூத்த குழந்தைக்குக் கீழ்ப்படிய வேண்டியிருப்பதால், தாழ்வு மனப்பான்மையோடும், நிறைவடையாத உணர்வோடும், கோபத்துடனுமிருப்பார்கள். கடைசியாகப் பிறந்தவர்கள் எல்லோருடைய கவனத்திற்கும் உள்ளாவதால், தற்காதல் (தர்பூசனை) கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த அனுமானங்கள் ஆய்வுகளால் நிரூபிக்கப்படாதலால், இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

English

Hypotheses to explain apparent differences among siblings depending on whether they are oldest, middle, or youngest children. Some theorists suggest that the personalities of the first born are influenced by the fact that more is usually expected of them, so they tend to become achievers but also tend to have more feelings of insecurity and failure. On the other hand, middle children are often made to feel inferior to their older siblings, so they may try harder to catch up or display traits of inadequacy feelings or anger in interacting with others. Youngest children, according to many of these theorists, may refine attention-getting skills and narcissistic traits. The research on such hypotheses is still inconclusive and somewhat contradictory.