blacklist

தவறிழைத்தவர்கள், முறைகேடானவர்கள், சந்தேகத்திற்குரியவர்கள் பற்றிய பட்டியல், கறுப்புப் பட்டியல்

தமிழ் விளக்கம்

சில நபர்களின் தவறான, முறைகேடான, சந்தேகத்திற்குரிய நடத்தைகளுக்காக, அவர்களைச் சில செயல்களிலிருந்து ஒதுக்கி வைக்கவும், சில சலுகைகளைப் பெறமுடியாவண்ணம் தடுக்கவும் தயாரிக்கப்பட்ட ஆவணம். தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபாடு காட்டுபவர்களைப் பணியிலமர்த்த வேண்டாம் என்ற குறிப்புடன் தொழிற்சாலை நிர்வாகிகள் பகிர்ந்துகொள்ளும் (கறுப்புப்) பட்டியல். வழங்கப்பட்ட நிதியை துஷ்பிரயோகம் செய்த தொண்டு நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை நிதிஉதவி அளிக்கும் நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ளும் (கறுப்புப்) பட்டியல்.

English

A file containing the names of those people deemed ineligible to participate in some activity or privilege because of their alleged behaviors or adherence to certain ideologies. For example, a group of business leaders might share the names of people who are considered potential union organizers and agree not to hire them.