blamer role
பழி சுமத்தும் பாங்கு, அடுத்தவரிடம் குறைகாணும் பாங்கு
தமிழ் விளக்கம்
பிறருடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ய முடியாதபோதும், அச்சுறுத்துதலுக்கு ஆட்படும் போதும், பெரும்பாலான மக்கள் அதை எதிர்கொள்ளும் நான்கு வழிமுறைகளில் (1. சாந்தப்படுத்துபவர் 2. பிறர்மீது குற்றம் சுமத்துபவர் 3. நாசூக்குப் பேச்சில் தன்னை மறைத்துக்கொள்பவர் 4. கவனத்தை திசை திருப்புபவர்), ஒன்றாகப் 'பழிசுமத்தும் பாங்கை' வர்ஜீனியா சதிர் என்ற உளவியலார் தெரிவிக்கின்றார். ஏதேனும் ஒரு விஷயத்தில் குறைகள் தென்படின் அதற்கு அடுத்தவர்களே காரணம் என்று பழி சுமத்தி அதன்மூலம் தங்களுடைய இயலாமையையும், தனிமையையும் மறைத்துக் கொள்வர்.
English
A recurrent pattern of interpersonal communication characterized by acting superior, finding fault, behaving dictatorially, and attributing one's problems to others. The role was delineated by Virginia Satir (Peoplemaking, Palo Alto, CA: Science and Behavior Books, 1972, p. 66), who described the blamer as a person who conceals inner feelings of loneliness and failure by making persistent accusations. Other roles are the computer role, the distracter role, and the placater role.