blaming the victim

பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி சொல்லுதல்

தமிழ் விளக்கம்

பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோடும் மனோபாவம் என்ற சொல்லாடல், இனத் துவேசம், வர்க்கத் துவேசம் மற்றும் பாலினத் துவேஷம் போன்றவற்றின் வெளிப்பாடு என்பதை வில்லியம் ரையான் என்பவர் பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி சுமத்தல் (Blaming the Victim -1971) என்ற புத்தகத்தில் முதன்முதலாக உபயோகப்படுத்தினார். கருப்பினத்தவர், ஏழைகள் மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் பின்னடைவிற்கு அவர்களின் பொறுப்பின்மையே காரணம் என்றும், கற்பழித்தலுக்கு உள்ளான பெண்கள் தங்களின் கவர்ச்சியான உடையாலும், உடல்மொழியாலும் ஆண்களைத் தூண்டி விட்டிருக்கின்றார்கள் என்றும், விபத்துக்குள்ளானவர்கள் தங்களுடைய கவனக்குறைவாலே அதை ஏற்படுத்தினார்கள் என்றும் சொல்லி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான, நிவாரண உதவிகளை நீர்த்து விடுகிறார்கள். இது சமூகப் பொறுப்பின்மையிலிருந்து, குற்றவுணர்வில்லாமல் தப்பிக்கத் துணை புரிகின்றது என்பது ரையான் முன்வைத்த வாதம்.

English

Attributing self-responsibility to individuals who are poor, socially or educationally deficient, victims of rape or other crimes, mentally or physically ill, or in some other ways casualties of unforeseen circumstances. This practice (for example,“if they had worked harder or saved their money, they wouldn't be poor”;“if she hadn't worn those clothes, she wouldn't have been raped or harassed”) is often used by opponents of pro-grams to prevent victimization or to help victims.