block grant

மொத்த மானியம், மொத்த நன்கொடை, பெருந்தொகை

தமிழ் விளக்கம்

உயர்நிலை அரசாங்கம் தனக்கு அடுத்த நிலையிலுள்ள அரசாங்க அமைப்புகளுக்கு வகை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யாமல், மொத்தமாக நிதியை ஒதுக்கீடு செய்து, அவர்கள் இன்றியமையாதது என்று கருதும் தேவைகளுக்கு முன்னுரிமை தந்து அந்த நிதியைக் கையாளும் உரிமையைக் கொடுப்பது. இது பன்முகத் தேவைகளை சமரசம் செய்கின்ற நிதிச் சட்டத்தின் கீழ் (Omnibus Budget Reconciliation Act (OBRA) of 1981) செய்யப்பட்ட ஒரு முக்கிய ஏற்பாடு. இந்த ஏற்பாடு பிரதேச அரசாங்கங்களின் நிதி கையாளும் திறனை அதிகரித்திருப்பதாக இதன் ஆதரவாளர்கள் தெரிவிக்க, எதிர்ப்பாளர்களோ நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க மறைமுகமாகச் செய்யப்படும் முயற்சி என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

English

A system of disbursing funds to meet a locality's health, education, and social welfare needs while permitting the recipient organizations to determine how best to distribute the money. Used mostly by the federal and sometimes state governments, the system is designed to consolidate budget itemization and eliminate the necessity of earmarking funds for every individual and categorical program. The system was a major provision of the Omnibus Budget Reconciliation Act (OBRA) of 1981 (P.L. 97-35). Proponents say it increases efficiency and local control, and opponents suggest that it is a covert way of reducing expenditures for social welfare needs.