block placement

தொடர் பயிற்சி, சமூகப்பணிக் கல்வியில் பின்பற்றப்படும் களப்பணிப் பயிற்சி .

தமிழ் விளக்கம்

சமூகப்பணிக் கல்வியில் வகுப்பறை போதனையும், களப்பணிப் பயிற்சியும் (வாரத்தின் மூன்று நாட்கள் வகுப்பறை போதனை இரண்டு நாட்கள் களப்பணி) உடன் நிகழ்வதாக (concurrent) அமையும். தொடர் பயிற்சியில் (bloc placement), வகுப்பறை போதனையும், களப்பணி பயிற்சியும் உடன் நிகழ்வதாக அமைக்காமல், களப்பணி மட்டும் தனித்தியங்குமாறு அமைக்கப்படும் பயிற்சி முறை. இதன்படி மாணவர்கள் ஒரு நிறுவனத்தில் தொழில்முறை மேற்பார்வையாளரின் கண்காணிப்பில் முழுநேரம் பணியாற்றி தீவிர பயிற்சி பெறுகின்றனர்.
பார்க்க Field Practice - களப்பணி செய் வாய்ப்பு, களப்பணி செய்ய அமர்த்துதல் - வகுப்பறை போதனையோடு களப்பணி அனுபவமும் இணைந்த சமூகப்பணிக் கல்வி போதனா முறை. களப்பணியில் ஈடுபடுவதென்பது சமூகப்பணிக் கல்வியோடு இணைந்த கற்பித்தல் மற்றும் கற்றல் முறை. (வகுப்பறை போதனையோடு, களப்பணி பயிற்சியும்) ஒரே நேரத்தில் / உடன் நிகழும் பணி அனுபவம், அறிதலையும், செயலையும் இணைக்கும் களம். ஞானமும், கர்மமும் இணையும் புள்ளி. இம்முறையில் களப்பணியில் கற்றுக்கொண்டதை வைத்து வகுப்பறையில் கற்றுக்கொண்டதை செம்மைப்படுத்தவும், வகுப்பறையில் கற்றுக்கொண்டதை வைத்துக் களப்பணிச் செயல்பாடுகளை செழுமைப்படுத்தவும் உதவும் கற்றல் முறை. சமூகப்பணிக் கல்வியில், வாரத்தில் 16 மணி நேரத்திலிருந்து 20 மணி நேரம் வரை, இரு நிலை மேற்பார்வையாளர்களின் வழிகாட்டுதலில் (கல்லூரி மேற்பார்வையாளர் மற்றும் களப்பணி செய்யுமிடத்தில் மேற்பார்வையாளர்) களப்பயிற்சி நெறிப்படுத்தப்படுகிறது.

English

In social work education, an alternative to the traditional concurrent placement in field instruction. In the traditional model of field placement, the student alternates classroom experiences with work in a social agency on different days of each week. In block placements, the student attends classes only for several months and then works virtually full-time in a social agency under academic and professional supervision for several months. The amount of time spent in the agency during a block placement is the same as in concurrent placement, and students must meet the same academic requirements.