blood alcohol level (BAL)

இரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹால் அளவு

தமிழ் விளக்கம்

மதுவை அருந்தியவுடன் மது அருந்துபவர்களின் இரத்தத்தில் நேரடியாக ஆல்கஹால் கலந்துவிடுகிறது. மூளைக்கு ஆல்கஹால் கலந்த இரத்தம் செல்கையில் உடல் உறுப்புகளை இயக்கும் மூளை நரம்புகள் சரிவரச் செயல்படுவதில்லை. எனவே நடை தடுமாறுகிறது. நாக்குக் குழறுகிறது. கண்பார்வை விரிவடைவதால் பார்வை மசமசப்பாகிறது. உடல் இயக்கங்களை ஒருங்கிணைப்பதும், சிந்திப்பதும் கடினமாகின்றன. எனவே மறதி ஏற்படுகிறது. அதிக அளவு ஆல்கஹாலை உடலால் உடனடியாக ஏற்றுச் சீரணித்துக் கொள்ள இயலுவதில்லை. இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை Blood Alcohol Count (BAC) என்று குறிக்கின்றனர். இது 0.10 அளவு வரை இருக்கும்பொழுது பெரிய ஆபத்து எதுவும் நேரிடாது. ஆனால், தொடர்ந்து மது அருந்துபவர்கள் உடலில் இது அதிகரித்துக் கொண்டே இருக்கும். இரத்தத்தில் மதுவின் அளவு மிக அதிகரிக்கையில் கோமா, மூச்சடைப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.

English

The amount of alcohol in a person's bloodstream expressed as a percentage of the total blood volume. For example, if the level is 0.05 percent, then five parts alcohol per 10,000 parts of blood exist. The amount may be determined by direct chemical analysis of the extracted blood or by a Breathalyzer. After alcohol is consumed, much of it enters the bloodstream until it is processed (that is, oxidized). The liver oxidizes alcohol at the rate of about one-half ounce per hour.