borderline personality disorder

தீர்மானிக்க இயலா ஆளுமைச் சிக்கல்

தமிழ் விளக்கம்

பதினொரு வகையான ஆளுமைச் சிக்கல்களில் ஒருவகை. இதன் அறிகுறிகள் மற்றவர்களோடு இணக்கமற்று நடந்துகொள்வது, எதிர்பாராமல் உணர்ச்சிவசப்படுவது, கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமை, அடிக்கடி மனம் மாறுவது, மற்றவர்களைத் தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது, எதிலும் அசுவாரசியத்துடனும் சலிப்புடனும் நடந்துகொள்வது, வெறுமையாக உணர்வது போன்றவை. பதினொரு வகையான ஆளுமைச் சிக்கல்களாவன 1. சந்தேக ஆளுமை, 2. மனப்பிளவு ஆளுமை, 3. மிகு மனப்பிளவு ஆளுமை, 4. சமூக விரோத ஆளுமை, 5. ஸ்திரமற்ற ஆளுமை, 6 நாடகப்பங்கான ஆளுமை, 7. தற்பூசனை (தற்காதல்) ஆளுமை, 8. தவிர்க்கும் ஆளுமை, 9. சார்ந்திருக்கும் ஆளுமை, 10. அலைபாயும் ஆளுமை, 11.நோயினால் ஏற்படும் ஆளுமை மாற்றம், 12. மேற்சொன்ன எந்த வகையிலும் அடங்காத ஆளுமை.

English

One of the 11 personality disorders characterized by some of the following symptoms and traits: deeply ingrained and maladaptive patterns of relating to others, impulsive and unpredictable behavior that is often self-destructive, lack of control of anger, intense mood shifts, identity disturbance and inconsistent self-concept, manipulation of others for short-term gain, and chronic feelings of boredom and emptiness.