borderline schizophrenia
தீர்மானிக்க இயலா மனச்சிதைவு நோய்
தமிழ் விளக்கம்
மனச் சிதைவு நோய் முழுமையாக வெளிப்படாத ஆரம்பநிலை. மனச்சிதைவு நோயின் அறிகுறிகள் வந்துவந்து செல்லும் நிலை. இதை உள்ளுறை மனச்சிதைவு நோயென்றோ, இலேசான மனச்சிதைவு நோயென்றோ சொல்லமுடியாது. இதன் அறிகுறிகளை எந்த வகைப்பாட்டிலும் சேர்க்கவியலாததால், இந்த சொற்பிரயோகம் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு, இதற்கு மாறாக, மிகு மனப்பிளவு ஆளுமைக் கோளாறு அல்லது சித்தப் பிறழ்ச்சி ஆளுமைக் கோளாறு (schizotypal personality disorder) என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது.
English
A descriptive term applied to individuals who, to some clinicians, seem to be at or near a conceptualized line between schizophrenia and a normal state. In such people, some of the symptoms seen in schizophrenia are observed or inferred, but the severity, duration, and progression of those symptoms are inconsistent or do not meet all the diagnostic criteria. The term has been confused with or considered synonymous with latent schizophrenia or simple schizophrenia. Because it is so imprecise, the term is now rarely used by skilled diagnosticians. Many who were once diagnosed as people with borderline schizophrenia are now given the diagnosis of schizotypal personality disorder.