boundaries
எல்லைகள், ஆளுமை எல்லைகள்
தமிழ் விளக்கம்
ஒரு சமூக அமைப்பும் அதன் துணை அமைப்புகளும், தங்களோடும், பிற அமைப்புகளோடும் தொடர்புகளை வரையறுத்துக் கொள்ளவும், தங்களின் அடையாளத்தை மேம்படுத்தவும், அதைத் தக்க வைத்துக்கொள்ளவும் ஏற்படுத்திக் கொண்ட நடைமுறைகளை எல்லைகள் / ஆளுமை எல்லைகள் / அடையாள எல்லைகள் என்கிறோம். உதாரணமாக ஒரு குடும்ப அமைப்பில், அதன் துணை அமைப்பாகிய உறுப்பினர்கள், தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், அவர்களின் பொறுப்புக்களையும், கடமைகளையும் வரையறுக்கவும், பிற குடும்பங்களோடு தொடர்பு கொள்ள ஏற்படுத்திக்கொள்ளும் நடைமுறைகளை எல்லைகள் எனலாம். ஒரு ஆரோக்கியமான குடும்பத்தில், இந்த எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும். மாறாக ஆரோக்கியமற்ற, ஒருவருக்கொருவர் ஈடுபாடற்ற, சிக்கலான குடும்பங்களில் இந்த எல்லைகள் கடுமையானதாகவும், கட்டுறுதியற்றதாகவும், தெளிவில்லாமலும் இருக்கும்.
English
Regions separating two psychological or social systems. A central concept in family system theories, pertaining to the implicit rules that determine how the family members or subsystems are expected to relate to one another and to nonfamily members. Analogous to the membranes of living cells, a function of boundaries is to differentiate systems and their subsystems and to permit the development of identity. Healthy family functioning largely entails clear boundaries; less-healthy functioning is seen where boundary subsystems are either inappropriately rigid or not consistently clear (that is, in a disengaged family or an enmeshed family). See also family rules.