boycott
பகிஷ்கரித்தல், புறக்கணித்தல், சமுதாய வாணிகத் தொடர்பிலிருந்து விலக்கல்.
தமிழ் விளக்கம்
ஒரு நபரிடமோ, நிறுவனத்திடமோ அல்லது அரசுத் துறையிடமோ தாங்கள் கொண்டிருக்கும் உறவுகளைக் கூட்டமாகப் புறக்கணித்தல். உதாரணமாக நியாமாற்று வணிகம் செய்யும் ஒரு நிறுவனப் பொருட்களை வாங்காதிருக்கவும், அந்த நிறுவனத்திற்கு ஆதரவளிக்காதிருக்கவும் சமூகப் பணியாளர்கள் வேண்டுகோள் விடுப்பது. சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி முன்னெடுத்த அன்னியப் பொருள் பகிஷ்கரிப்பை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
English
An organized refusal to maintain certain relationships with a person, organization, or government body. For example, a community organizer might convince all residents of a neighborhood to stop patronizing a store that discriminates against minorities.