Brady Bill

பிராடின் மசோதா

தமிழ் விளக்கம்

அமெரிக்க ஜனாதிபதியாயிருந்த ரொனால்ட் ரீகனைப் படுகொலை செய்ய முயன்றபோது, அவருடைய பத்திரிகைத் தொடர்பாளர் ஜேம்ஸ் எஸ் பிராடி கொல்லப்பட்டார். அதையொட்டி துப்பாக்கி விற்பனையில் நிபந்தனைகளைக் கொண்டுவர பிராடியின் மனைவி சாராபிராடி முன்னெடுத்த பிரச்சாரத்தின் விளைவாக, துப்பாக்கி உரிமம் பெற நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டு, 1993 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது. அதன்படி கைத்துப்பாக்கி வாங்க நினைப்பவர்கள் தங்களைப்பற்றிய தகவல்களைக் கொடுத்து, சட்டச் சரத்துகளைப் பின்பற்றுவதாக வாக்குறுதி அளித்த பின், ஐந்து நாட்கள் காத்திருப்பிற்குப் பின் துப்பாக்கியை வாங்கிக்கொள்ளலாம் என்ற நடைமுறை அறிமுகமாகியது.

English

Gun control legislation signed into law in 1993 that requires a five-day waiting period before certain handguns can be purchased and requires gun sellers to check applicants to ensure they comply with laws. The law was named after President Ronald Reagan's Press Secretary James S. Brady, who was shot during an assassination attempt against the president.