brain drain
அறிவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை, கருத்து வறட்சி / சிந்தனை வறட்சி
தமிழ் விளக்கம்
ஒருநாட்டின் அல்லது நிறுவனத்தின் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் தலைமைக்கான மனிதவளம் இடம்பெயரும் சூழ்நிலை. வளர்ந்துவரும் நாடுகள், தங்களுடைய குறைவான வளங்களைப் பயன்படுத்தி கல்வி கொடுக்க, அந்தக் கல்வியைப் பொருட் செலவில்லாமல் பெற்றவர்கள், அதிக ஊதியத்திற்காகவும், வாழ்க்கைச் சவுகரியங்களுக்காகவும் அது கிடைக்கும் பிற இடங்களுக்கோ, நாடுகளுக்கோ புலம்பெயரும் போது, வளரும் நாடுகள் தன்னுடைய முன்னேற்றத்திற்குப் போதுமான மனிதவளம் இன்றி அவஸ்தைப்படும்.
English
A nation's or institution's loss of scientific, technical, or leadership talent when these people relocate. This is an especially serious problem in developing countries, which use their limited resources to educate citizens, only to see them migrate to other nations that can offer higher salaries or other desirable conditions.