Breathalyzer
சுவாசத்தின் மூலம் மது அருந்தியதைக் கண்டுபிடிக்கும் கருவி
தமிழ் விளக்கம்
ஒருவர் மது போதைக்கு உள்ளாகி இருக்கின்றாரா என்பதையறிய, அவர் இரத்ததில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவை அவர் வெளிவிடும் மூச்சுக்கற்றைக் கொண்டு அளவிட உதவும் கருவி. வாகன ஓட்டிகளிடம் இந்தச் சோதனையை போக்குவரத்துக் காவலர்கள் செய்வர். பெரும்பாலான நாடுகளில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும்போது, தேவைப்படும் போது இச்சோதனைக்கு உட்படுவதாக ஒப்புக்கொண்டால்தான் உரிமம் வழங்கப்படும்.
English
Trademark for a test device used to determine if a person is intoxicated. Most commonly administered by a trained police officer on those people operating motor vehicles, the test chemically analyzes the blood alcohol level (BAL) as indicated by a breath test. Most states require that applicants for driver's licenses consent in advance to taking the test when requested, and failure to take or pass the test is admissible in court.