brief psychotic disorder
குறுகிய காலக்கூறுடைய (தற்காலிக) உளவியல் கோளாறு
தமிழ் விளக்கம்
உளவியல் கோளாறுகளுக்கான அறிகுறிகளான மன மருட்சி, இல்பொருள் உணர்வு, (பிரமை), பேச்சுக்குளறல், நடத்தைப் பிறழ்வு, உணர்விழப்புடன் கூடிய பித்தநோய், ஒரு நாளோ அல்லது ஒரு மாதமோ நீடித்திருக்கும் நிலை. இது மருத்துவக் காரணங்களாலோ, போதைப் பழக்கத்தாலோ, பிற மனநோய்களாலோ வருவதில்லை. மாறாக மிகுந்த மனவலியைத் தரக்கூடிய மரணங்கள், அதிர்ச்சியினால் ஏற்படும் உளவேதனை தரும் மன அழுத்தங்களும், பிரசவித்த நான்கு வாரங்களுக்குள் ஏற்படும் மன அழுத்தங்களும் இக்கோளாறுக்கு காரணமாகின்றன. மன அழுத்தங்களால் இக்கோளாறு வருவதால் இதைக் கடந்த காலத்தில் குறுகிய காலக்கூறுடைய (தற்காலிக) எதிர்வினையாற்று மனநோய் (brief reactive psychosis) என்று அழைத்தனர்.
English
The sudden onset of psychotic symptoms such as delusion, hallucination, disorganized speech or behavior, or catatonia, lasting at least one day and less than one month. This condition is not caused by medical conditions, substance abuse, or other mental disorders. The disorder may be the result of a marked stressor (such as loss of a loved one or other psychological trauma) or occur without marked stressors or within four weeks postpartum. This disorder, when the result of marked stressors, was formerly known as brief reactive psychosis.