brief therapy
குறுகிய காலக்கூறுடைய (தற்காலிக) சிகிச்சை
தமிழ் விளக்கம்
உளப்பிணி சிகிச்சை முறையிலும், நோய் தொடர்புடைய (சிகிச்சை முறை சார்ந்த - clinical social work) சமூகப்பணியிலும் குறிக்கோள்களை முன் தீர்மானித்து. வரையறுக்கப்பட்ட அமர்வுகளில் அளிக்கப்படும் குறுகிய காலச் சிகிச்சை. இந்தச் சிகிச்சை முறை குறிப்பிட்ட பிரச்சனைகள் பற்றி வரையறுத்து, அதிலிருந்து மீளும் நோக்குடையதாகவும், அதில் கவனம் செலுத்தி செயல்படுவதாகவும் அமையும்.
English
Any form of psychotherapy or clinical social work intervention in which specific goals and the number of sessions are predetermined. Brief therapy is usually goal oriented, circumscribed, active, focused, and directed toward specific problems or symptoms.